ஃபில்டர் காபி  மணக்க...

உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதில் அரைத்தேக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஃபில்டர் காபி  மணக்க...

உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதில் அரைத்தேக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி ரெடி.

தோசைமாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய்வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்துவிடும். தோசையும் சுவையாக இருக்கும்.

வறுத்த புழுங்கலரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டால், கூட்டுக் கறிகளை இறக்கி வைக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.

எள்ளை வாணலியில் வறுக்கும்போது, வெடித்து வெளியே சிதறாமல் இருக்க அவற்றை ஒரு சிறிய துணியில் பொட்டலம் மாதிரி கட்டி வாணலியில் போட்டு எள்ளை வறுக்க வேண்டும்.

மணக்கும் ஃபில்டர் காபி வேண்டுமா ஒரு துண்டு சாக்லெட் அல்லது வெண்ணிலா விதையை ஃபில்டரில் வைத்து காபி கலந்தால் காபி தன் மணத்துடன் சுவையாக இருக்கும்.

பூரி மொறு மொறுப்புடன் இருக்க, மாவைப் பிசைந்து தேய்த்தப்பிறகு, அதை ஒரு டப்பாவில் போட்டு அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு எடுத்து பொரித்தால் பூரி க்ரிஸ்ப்பியாக இருப்பதுடன் எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.

மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி மோர் கலந்து பாருங்கள். சாதம் புதியது போலாகிவிடும்.

இரண்டே மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கலக்குங்கள். இதை அப்படியே ஹாட்பேக் வைத்து மூடி விடுங்கள். இரண்டே மணி நேரத்தில் சுவையான கெட்டித்தயிர் ரெடி.

கறிவேப்பிலை, புதினா இலைகளை உருவியதும், அதன் காம்புகளை தூக்கி எறியாதீர்கள், அவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து வறுத்த உளுந்தம் பருப்போடு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். ரசம் மற்றும் காய்கறிகளில் இந்தப் பொடியைப் தூவிவிட்டால் சுவையும் மணமும் அசத்தலாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com