கொழுப்பை கரைக்கும் அக்ரூட்!

அக்ரூட் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதிலுள்ளது. அக்ரூட் பருப்பு ருசியானது, அதிக சத்து நிறைந்தது.
கொழுப்பை கரைக்கும் அக்ரூட்!


அக்ரூட் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதிலுள்ளது. அக்ரூட் பருப்பு ருசியானது, அதிக சத்து நிறைந்தது.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட் பருப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வால்நட்டில் புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமுள்ளது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இந்த பருப்பில் அடங்கியுள்ளது.

அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் மிக அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க கூடியது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

அக்ரூட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு வேலை செய்யும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அக்ரூட் பருப்புகளை தொடர்ந்து சாப்பிடும்போது அந்த கற்களை கரைத்து சிறப்பாக செயல்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com