பழங்களின் மருத்துவ குணங்கள்!
By - சி.ஆர்.ஹரிஹரன் | Published On : 11th August 2021 06:00 AM | Last Updated : 11th August 2021 03:59 PM | அ+அ அ- |

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஆப்பிளை அரைத்து வலி இருக்கும் இடத்தில் பற்றாக போட்டு வந்தால் வலி குறைந்து விடும். அது போல் தொடர்ந்து ஒரு மாதம் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் ஒரே சீராகவும் இருக்கும்.
மாதுளம் பழச்சாறில் தேன் கலந்து, தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
மாதவிடாயின்போது வயிற்றுவலி, ரத்தப்போக்கு அதிகம் இருப்பவர்கள் நாவல் பழங்களில் உப்பு தூவி அரை மணி நேரம் கழித்து நீரை வடித்து விட்டு பழமாகவோ, ஜூஸாகவோ பயன் படுத்தலாம்.
பப்பாளி இலைச்சாறை உடலில் படர்தாமரை உள்ள இடத்தில் காலை, மாலை தொடர்ந்து ஒருவாரம் தடவி வர படர்தாமரை மறைந்துவிடும்.