தயிர் அதிகம் புளிக்கிறதா? 

கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா? அதனுடன் 2 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரை உபயோகப்படுத்தினால் புளிப்பு இன்றி அருமையாக இருக்கும்.
தயிர் அதிகம் புளிக்கிறதா? 

கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா? அதனுடன் 2 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரை உபயோகப்படுத்தினால் புளிப்பு இன்றி அருமையாக இருக்கும்.

இலையுடன் கூடிய காய்கறிகள் அதே பசுமையுடன் இருக்க அதை சேகரித்து வைக்கும் போது செய்திதாள்களில் சுற்றி வைக்கவும். 

பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

பருப்பு வகைகளைச் சமைக்கும் போது சிறிதளவு பூண்டை சேர்த்தால் வாயு தொந்தரவை குறைக்கும்.

ஊறுகாயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

வேக வைத்த முட்டையின் ஓட்டை அகற்றாமல் குளிர்ந்த நீரில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் சிறிது காலம் கெடாமல் இருக்கும்.

பார்லி பவுடரை காய்கறிகள் சமைக்கும் போது சிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

மில்க் கிரீமிலிருந்து வெண்ணெய்யைப் பிரித்து எடுத்து பிறகு எஞ்சி இருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு பாலைச் சேர்த்து கொதிக்க வைத்தால் மென்மையான பன்னீர் கிடைக்கும்.

சமையல் செய்ய குக்கருக்குள் வைக்கப்படும் பொருள்கள் குக்கரின் முக்கால் பகுதிக்கு மேல் இருக்கக் கூடாது. அதுபோன்று பிரஷர் குக்கர் சூடு ஆறும் முன்பே "வெயிட்டை" உருவி எடுத்தால், ஆவி முகத்தில் அடிக்கக் கூடும். அதனால் பாதுகாப்பாக அதனை உருவி எடுங்கள்.

பூரி மென்மையாக, ருசியாக இருக்க வேண்டுமானால் மாவை பிசையும் போதே அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை (சீனி) சேருங்கள்.

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேத்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com