ஸ்பாஞ்ச் கேக்
By எம்.எஸ். வாணி லட்சுமி | Published On : 22nd December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 06:10 PM | அ+அ அ- |

தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
சர்க்கரை - 200 கிராம்
முட்டை -5
வென்னிலா எசென்ஸ் - அரை தேக்கரண்டி
சாக்கோ சிப்ஸ் - அரை கிண்ணம்
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
ஆரஞ்சுசாறு - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பெரிய கண்ணாடி கிண்ணத்தில், ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதை குறைந்தது 2 நிமிடங்கள் நன்றாக அடிக்கவும். இப்போது முட்டையில் நுரை வந்திருக்கும். அதோடு 1/2 கிண்ணம் சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும். ஒரு நிமிடம் நன்றாக அடித்து விட்டு, கோப்பையில் இருக்கும் சர்க்கரையின் மறு பாதியைச் சேர்க்கவும்.
இந்த கலவையை 7-8 நிமிடங்கள் விடாமல் கலக்கவும். இப்போது இந்த கலவையுடன் மைதா மாவை சேர்த்து விடாமல் அடிக்கவும். நன்றாக கலக்கா விட்டால், கலவை கட்டி கட்டியாக இருக்கும். அதனால் 2 நிமிடங்களுக்கு நன்கு அடிக்கவும்.
இதன் பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள அளவீடுகளின்படி நீங்கள் விரும்பும் ஃப்ளேவரை இந்த கலவையில் சேர்க்கவும். பின்னர் ஒரு மைக்ரோவேவ் பேக்கிங் பான் தட்டில் பட்டர் பேப்பர் விரித்து, அதன் மீது கலவையை ஊற்றவும். இதை ஒரு மணி நேரம் 160 செல்சியஸில் வேக வைக்கவும். வெந்ததும், அதை சிறிய துண்டுகளாக வெட்டி குளிர்வித்து பரிமாறவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...