மாதுளையின் பயன்கள்! 

மாதுளை மற்றும் தூதுவளை வளர்த்த வீட்டில் வயிற்றிலும் நெஞ்சிலும் கலங்கமில்லை என்பது பழமொழி.
மாதுளையின் பயன்கள்! 

மாதுளை மற்றும் தூதுவளை வளர்த்த வீட்டில் வயிற்றிலும் நெஞ்சிலும் கலங்கமில்லை என்பது பழமொழி.

மாதுளம் பழத்தில் அயன், பாஸ்பரஸ், தியாமின், நியாசின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த இப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது.

இப்பழத்தை உண்பதால் எலும்புகள், பற்கள் உறுதிப்படும்.

புதிய ரத்தம் உண்டாகும். உடல் வலுப்பெறும்.

நினைவாற்றல் பெருகும். தாகம், காய்ச்சல் தணிக்கும்.

குடல் செரிமானப்பாதையை வலுப்படுத்தும்.

அடிக்கடி மாதுளைச்சாறு உண்பதால் வயிற்றுப்போக்கு அறவே நிற்கும்.

காய்ந்த மாதுளைத்தோல், உப்பு, மிளகு சேர்த்துப் பொடி செய்து பல் துலக்கினால் பல்லில் ஏற்படும் ரத்தக்கசிவு நீங்கி, ஈறு பலமடையும்.

தோல் சுருக்கத்தை குறைத்து, இளமைப்பொலிவை ஏற்படுத்தும்.

இரைப்பையைச் சுத்தப்படுத்தி செரிமானத்தை தூண்டும்.

உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள பித்தத்தை வெளியேற்றும்.

அரோசிக நோய் ( ருசியறியாது நாக்கு மரத்துப்போதல்) என்னும் நோயைப் போக்கி நாக்கை ருசியறிய வைக்கும்.

("இயற்கை நெறி, இனிய மருந்து' என்னும்  நூலிலிருந்து.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com