சின்னத்திரை மின்னல்கள்!
By | Published On : 17th March 2021 06:00 AM | Last Updated : 16th March 2021 06:43 PM | அ+அ அ- |

கலெக்டர் ஆகணும்!
"ராஜா சின்ன ரோஜா' படத்தில் குழந்தையாக அறிமுகமானவர் ராகவி. ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடித்தவர் தொடர்ந்து சின்னத்திரையில் முக்கிய இடம் பிடித்துள்ளார். "திருமதி செல்வம்" தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்தது முதல் , தொடர்ந்து தனக்கு நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் வருவதாக சொல்கிறார்.
தற்போது "மகாராசி' தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருபவர், "என்றென்றும் புன்னகை' தொடரில் சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ""எனக்கு வரும் பாத்திரங்களை விரும்பி ஏற்று நடிக்கிறேன். கலெக்டர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதுவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை'' என்கிறார். அஜித் மனைவி ஷாலினியின் நெருங்கிய தோழி இவர். குதிரையேற்றம் படித்தவர்.
புது மனுஷி
சின்னத்திரை தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.
காலை சூரிய உதயத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ""மாலத்தீவுக்கு நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாருங்கள். இயற்கை அன்னை நம்மை தாலாட்டும் இடம் இது.
நம்முடைய கவலைகள் எல்லாம் மறந்து போகும். உடலில் புதுவித புத்துணர்ச்சி உண்டாகும். இவையனைத்தும் நான் உணர்ந்து புது மனுஷியாகி'' இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.