சீரகத் தண்ணீரின் நன்மைகள்!
By - கா.அஞ்சம்மாள், திருவாடானை | Published On : 17th March 2021 06:00 AM | Last Updated : 17th March 2021 06:11 PM | அ+அ அ- |

சீரகத் தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்னைகளை போக்கிவிடலாம்.
துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்னைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும். சீரக தண்ணீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும்.
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைப் பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தலாம். சீரக தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு துணைபுரியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும்.
பல்வேறு வகையான நோய் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும். சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.
காலையில் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் பருகி வந்தால் சுவாசம் சார்ந்த பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீர் கல்லீரலுக்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.
சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன. அவை சருமத்தை பளிச்சிடவைக்கும். சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.