கரோனாவுக்காக கோவாக்ஸ் தடுப்பூசியை உருவாக்கி இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அளித்திருப்பதாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எப் முதன்மை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெண்கள் மத்தியில், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பேசும் போது சொன்னார்:
""இந்த பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வங்கதேசம், நேபாளம், மியான்மார் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா நன்கொடை அடிப்படையில் மற்றும் வர்த்தக அடிப்படையில் தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இந்த சர்வதேச சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், தனது தடுப்பூசி கொள்கை மூலம் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியா வழக்கமான 6 சதவீத வளர்ச்சிக்கு பதிலாக 8 சதவீத எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. கரோனாவுக்கு மத்தியில் இரண்டு இலக்க வளர்ச்சி காணும் பெரிய பொருளாதாரங்களில் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. ஐ.எம்.ஐ, 2021-இல் இந்தியா 11.5 சதவீத வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது. இந்தியாவின் பரப்பு காரணமாக, இந்தியா வளர்ச்சி அடையும் போது, உலகின் மற்ற பகுதிகளில் இருந்து சரக்குகளுக்கான தேவை அதிகரிப்பது நல்ல விஷயம்'' என்றார் கீதா கோபிநாத்.