திரைப்படமாகிறது சண்டை நாயகி வாழ்க்கை
By -கண்ணம்மா பாரதி | Published On : 17th March 2021 06:00 AM | Last Updated : 17th March 2021 06:00 AM | அ+அ அ- |

இந்தியாவின் சினிமா பிரம்மாண்டங்களில் ஒன்றான "ஷோலே' படத்தில் ஹேமமாலினிக்கு டூப்பாக நடித்தவர் ரேஷ்மா பத்தான். 1968-லிருந்து இந்திப்படவுலகில் பல நூறு படங்களில் நாயகிகளுக்கு டூப்பாக சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் ரேஷ்மா பத்தானின் வாழ்க்கை திரைப்படமாகியுள்ளது!
"ஷோலே' திரைப்படத்தில் "பாஸந்தி' வேடத்தில் ஹேமமாலினி நடித்திருந்தார். அந்த வேடத்தில் நடித்ததற்காக ஹேமாவிற்கு பலத்த பாராட்டுதல்கள் கிடைத்தன. அதிலும் குதிரை வண்டியை வேகமாக ஓட்டும் காட்சி அருமையாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அந்த குதிரை வண்டியைப் ஓட்டியவர் ரேஷ்மா பத்தான்.
ரேஷ்மா பெரும்பாலான ஸ்டண்ட் நடிகர்களை போல, திரைப்படத்தின் பின்னணியிலேயே முகம் காட்டாமல் வாழ்ந்து விட்டவர். அப்படிப்பட்ட ரேஷ்மாவுக்கு வாழ்க்கையின் பின்னாளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
பட்ங் நட்ர்ப்ஹஹ் எண்ழ்ப் எனப் பெயர் இடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிதிதா பேக் என்ற நடிகை ரேஷ்மா பத்தானாக நடித்துள்ளார்.
வறுமைக் குடும்பத்தின் வருமானத்திற்காக நான் படவுலகில் அறிமுகமான போது வயது 14 தான். அப்போதே சண்டைக் காட்சிகளில் பெண் நடிப்பதா.. என்று ஆண் சண்டை கலைஞர்கள் எதிர்த்தார்கள். அப்போது பெண் டூப் கலைஞர்கள் யாரும் படவுலகில் இல்லை. ஆண்கள்தான் பெண்ணாக வேடமிட்டு சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். எங்களின் வாய்ப்பை ரேஷ்மா பறிக்கிறார் என்பது அவர்களது புகாராக இருந்தது.
எனது வாழ்க்கை படமாக தயாரிக்கப்பட்டிருப்பதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. எந்த ஸ்டண்ட் கலைஞருக்கும் கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துள்ளது'' என்கிறார் ரேஷ்மா பத்தான்.