முடியைப் பாதுகாக்க..
By - ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. | Published On : 24th November 2021 06:00 AM | Last Updated : 24th November 2021 06:00 AM | அ+அ அ- |

ஒரு கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதை மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசி வர முடி உதிர்வது நிற்கும்.
வேப்பங்கொழுந்தைக் கிள்ளி, அதில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் ஒரு பெரிய துண்டு இவற்றுடன் தண்ணீர் தெளித்து மைபோல் அரைத்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் முடி உதிராது.
முடி அதிகம் உதிர்ந்தால் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துத் தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சிகைக்காய் போட்டுக் குளித்தால் தலை முடி உதிர்வது நின்று விடும்.
முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். கரு கருவென முடி வளரவும் உதவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...