முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
மஞ்சள் மருத்துவம்!
By - கவிதா பாலாஜி | Published On : 24th November 2021 06:00 AM | Last Updated : 24th November 2021 06:00 AM | அ+அ அ- |

நம் உடலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை நீக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.
கருப்பை வாய் புற்றுநோய் என்ற நோயை பெண்களுக்கு உண்டாக்கும் "யூமன் பப்பிலோமா' வைரஸ் தாக்கத்தை குறைக்க மஞ்சள் உதவுகிறது.
மஞ்சள் பூசி குளித்து வந்தால் நம் தோல்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
பயன்படுத்தும் முறை:
கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால் சருமம் அழகு பெறும்.
சந்தனப் பொடியுடன் மஞ்சள், பன்னீர் கலந்து முகத்தில் தடவி உலரவிட்டு 10 நிமிடம் கழித்து முகம் கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
பாலில் மஞ்சள் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்துவர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறும்.
தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி வந்தால் வெயிலினால் மாறிய சருமத்தின் நிறம் பொலிவு பெறும்.