முதல் வனவிலங்கு புகைப்பட கலைஞர்!
By DIN | Published On : 01st September 2021 06:00 AM | Last Updated : 01st September 2021 06:00 AM | அ+அ அ- |

ராதிகா ராமசாமி இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்பட கலைஞர். டெல்லியை சேர்ந்த இவர் 2004- ஆம் ஆண்டு வனவிலங்கு புகைப்பட கலையை ஆரம்பித்தார்.
பறவைகள் படம் எடுப்பதில் கைதேர்ந்து அதை முதன்மையாக செய்ய ஆரம்பித்தார். இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களுக்கு சென்று அரிய வகைப் பறவைகளை படம் எடுத்துள்ளார். நம் நாட்டில் இருக்கும் மதிப்பிட முடியாத இயற்கை வளங்களைப் பற்றியும்,
அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றியும் நம் மக்களுக்கு உணர்த்துவதுதான் இவரின் நோக்கம். சிறந்த பறவைகள் புகைப்பட கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், உலகெங்கிலும் பல நாடுகளில் தன் புகைப்படங்களை கண்காட்சியாக வைத்துள்ளார்.