குக்கரில்  பிரியாணி  செய்யும்போது

குக்கரில்  பிரியாணி  செய்யும்போது  மூடியை மூடுவதற்கு  முன்பாக  சிறிது  எண்ணெய்  விட்டுக்கிளறி  மூடினால்  பிரியாணி  உதிரியாக  வரும் குழைந்து போகாது.
குக்கரில்  பிரியாணி  செய்யும்போது


குக்கரில் பிரியாணி செய்யும்போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டுக்கிளறி மூடினால் பிரியாணி உதிரியாக வரும் குழைந்து போகாது.

அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்பு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றுடன் வெங்காயத் துண்டுகளையும் சேர்த்து அரைத்து விட்டால் அடை மெலிதாக வருவதுடன் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

சுட்டு வைத்த அப்பளம் நமத்துப் போய் விட்டதா, அந்த அப்பளங்களை நான்காக வெட்டி, எண்ணெய்யில் மீண்டும் பொரித்து விடுங்கள். ருசியாக இருக்கும்.

மோர் மிளகாய் வறுக்க, போகிறீர்களா? தோசை சுட்டு முடித்தப்பின் கல் சூடாக இருக்கும்போதே ஏழெட்டு மோர் மிளகாய்களைப் போட்டு சில சொட்டு எண்ணெய்விட்டு வறுத்தால் அதிகம் கருகாமலும் மொறு மொறுவென்றும் வறுபடும்.

அவலை சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொண்டு தோசை வார்க்கும்போது கலந்து ஊற்றினால் சுவையான ஸ்பான்ச் தோசை தயார்.

தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ரசத்தின் ருசி பிரமாதமாக இருக்கும்.,

அவியல் செய்யும்போது தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் இவற்றோடு சிறிது அரிசியை நீரில் ஊற வைத்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து விட்டால் அவியல் வெள்ளை வெளேரென்றும் கெட்டியாகவும் இருக்கும்.

கலவை சாதம் செய்யும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். சாதம் பொலபொலவென்று உதிரியாக சுவையாக இருக்கும்.

தோசைக்கு அரைக்கும்போது ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு,துவரம்பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் ஊற வைத்து அரைத்தால் தோசை மிகவும் டேஸ்டியாக இருக்கும்.

தட்டை செய்யும்போது மைதாமாவு, அரிசி மாவுக்குப் பதிலாக கோதுமை மாவை ஆவியில் வேக வைத்துச் செய்யலாம். தட்டை அதிக ருசியுடன் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com