அதலைக்காயின் மருத்துவ குணங்கள்!

அதலைக்காய்  என்பது பாகற்காயின் நெருங்கிய மரபுவழிக் கொண்ட ஒரு கொடி இனமாகும்.
அதலைக்காயின் மருத்துவ குணங்கள்!
Published on
Updated on
1 min read

அதலைக்காய்  என்பது பாகற்காயின் நெருங்கிய மரபுவழிக் கொண்ட ஒரு கொடி இனமாகும். அதலைக்காய் தமிழ் நாட்டிலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு பாகற்காய்களைப் போலவே இருக்கும்.  சுவையும் கசப்பான சுவை கொண்டது. 

இக்கொடி பெரும்பாலும் தானாக வளர்வது. இதை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்கள் விளையும் வயல்களின் வரப்புகளில் இவை வளருகின்றன. இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தைத்திருநாளுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன.

பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும். 

ஒரே கொடியில் ஆண்பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண் மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன.  ஆனால், பெண் மலர்கள்தான் காய்களாகின்றன.  காய்கள் கரும்பச்சை நிறமாக இருக்கும். 

உடல் நலத்துக்கு தேவையான பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளது இக்காய். குறிப்பாக நீரிழிவுக்கும், குடற்புழுவுக்கும் நல்ல மருந்தாகிறது.   சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.

அதலைக்காயில் அடங்கியிருக்கும் சத்துகள் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம்,  சோடியம், இரும்பு, செப்பு, மங்கனீசு, துத்தநாகம், பாஸ்பரஸ், விட்டமின் சி,கரோட்டீன் போன்றவை அடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com