உடல் எடை குறைய சாப்பிடக்கூடாத பழ வகைகள்!

உடல் எடையைக் குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம்.
உடல் எடை குறைய சாப்பிடக்கூடாத பழ வகைகள்!
Published on
Updated on
1 min read


உடல் எடையைக் குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். முக்கியமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, முதலில் உடல் எடையை அதிகரிக்கத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அந்த வகையில், பலரும் டயட்டின் போது ஃபுரூட் சாலட் சாப்பிடுவார்கள். அந்த ஃபுரூட் சாலட் தயாரிக்க தேவையான பழங்கள் பார்த்து கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் பல பழங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.  அந்த பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். எனவே,  எடையைக் குறைக்க வேண்டுமானால் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

அன்னாசிப்பழம்

அன்னாசி மிகவும் ஆரோக்கியமான பழம் தான்.  ஆனால், இயற்கையாகவே அன்னாசி மிகவும் இனிப்பானது. இதில் உள்ள கலோரிகளால் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆகவே இந்தப் பழத்தை அதிக உடல் பருமனைக் கொண்டவர்கள் உட்கொள்ளக்கூடாது.

அவகோடா

அவகோடா  பொதுவாகவே,  அதிக கலோரி உள்ள பழம். ஒரு 100 கிராம் அவகோடா பழத்தில் 160 கலோரிகள் உள்ளன. அவகோடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் வளமான அளவில் உள்ளது. ஆகவே இப்பழத்தை சாப்பிடுவதாக இருந்தால், குறைவான அளவில் சாப்பிடுங்கள்.

திராட்சை

திராட்சையில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, மிகக்குறைவான அளவிலேயே திராட்சையை சாப்பிட வேண்டும். 100 கிராம் திராட்சையில் 67 கலோரிகள் மற்றும் 16 கிராம் சர்க்கரை உள்ளது. ஆகவே டயட்டில் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிடுவது சிறந்ததல்ல.

வாழைப்பழம்

பழங்களில் வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான மற்றும் விலை குறைவாக கிடைக்கும் பழம். ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமாக இருக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் கலோரிகள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 150 கலோரிகள் உள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 2-3 வாழைப்பழங்களை சாப்பிட்டால், அதன் விளைவாக உடல் எடை  அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாம்பழம்

பழங்களின் ராஜா மாம்பழம்.  மாம்பழத்தில் கலோரியும்,  சர்க்கரையின் அளவும் மற்ற பழங்களைவிட சற்று கூடுதலாக இருக்கும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்  மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், 1-2 துண்டுகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. 

லிச்சி

பிங்க் நிறத் தோலைக் கொண்ட லிச்சி பழம் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமான பழமும் கூட. ஆனால் ஒரு கப் லிச்சியில் 29 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின், லிச்சியை உங்கள் டயட்டில் சேர்ப்பது நல்ல யோசனையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com