பயிறு வகைகள் கெடாமல் இருக்க...

வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு சாறெடுத்து, சாறை கொதிக்க விட்டு, ஆற வைத்து பின்னர் அதனுடன் மோரும், கொஞ்சம் உப்பும் கலந்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
பயிறு வகைகள் கெடாமல் இருக்க...

வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு சாறெடுத்து, சாறை கொதிக்க விட்டு, ஆற வைத்து பின்னர் அதனுடன் மோரும், கொஞ்சம் உப்பும் கலந்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது அதில் சிறிது சோம்பை தூளாக்கி தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் கமகம வாசனையுடன் இருக்கும்.

இட்லி மீந்து விட்டால் நன்றாக உதிர்த்து தேவையான அளவு கடலை மாவு, பெருங்காயம், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நீர் விட்டு பிசைந்து, வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்க சுவையான இட்லி பக்கோடா தயார்.

உப்புமா, சாதம், பொரியல், பிரியாணியை ஓவனில் சூடு செய்ய விரும்பினால் சிறிதளவு நீரை தெளித்து சூடு செய்தால் வறண்டு போகாமல் இருக்கும்.

பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

மைதா மாவினால் செய்த உணவுகளை குறைத்து கொண்டால் உடல் பருமன் குறையும்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

அடுப்பில் வைத்த பாத்திரம் கருகி விட்டதா? கவலை வேண்டாம். ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை அதில் போட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் தேய்த்தால் "பளிச் " என்று ஆகிவிடும்.

முட்டைக்கோஸைத்துருவி நன்றாக வதக்கி மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.

தயிர்வடை செய்யும்போது, வடையின் மேல் ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீறிவிட்டு தயிரில் ஊறவைத்தால், தயிர் எளிதாக வடையினுள் சென்று ருசியைக் கூட்டும்.

தக்காளி சூப்பில் போட பிரெட் துண்டு கைவசம் இல்லையா? ஜவ்வரிசி வடாம் இருந்தால் அதைப் பொரித்து சூப்பில் போட்டு சாப்பிடலாம்.

மைக்ரோவேவ் அவனின் உள்ளே துணுக்குகள் அதிகமாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்துக் கொதிக்க விடுங்கள். பத்து நிமிட ங்கள் கழிந்ததும் எளிதாக துடைத்து சுத்தம் செய்து விடலாம்.

காலிப்ளவரை தூண்டுகளாக நறுக்கி வேகவைத்துத் எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து பின்னர் கோபி மஞ்சூரியன் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

ஒரு கிலோ சர்க்கரையில் 200மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, ஆறவிட்டு எடுத்து வைத்தால் சர்க்க ரை சிரப் தயார். இதை தேவையான போது குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தலாம்.

தண்ணீர் பாட்டிலில் உள்ள கறை கண்ணை உறுத்துகிறதா? கல் உப்பு, கோலப்பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி, பிறகு தண்ணீர் ஊற்றிக் கழுவினால் கறை அகன்றுவிடும்.

ரசம் வைத்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் போன்றவற்றை ரசத்தில் போட்டு மூடிவைத்து, சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் ரசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

எலுமிச்சை சாதம் சுவையாக இருக்க, சிறிது தனியா, காய வைத்த இரண்டு மிளகாயை எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்து சேர்த்துக் கிளறவும். சாதம் தனியா பொடியில் ஊறி, ருசி அபாரமாக. இருப்பதுடன் வித்தியாசமாகவும், நல்ல காரமாகவும் இருக்கும்.

மோர்க்குழம்பு திக்காக வர முதலில் மோர் தண்ணீராக இருக்கக் கூடாது. மல்லி, கடலைப்பருப்பு, இஞ்சி, தேங்காய்த்துருவல் நான்கையும் நன்றாக, கெட்டியாக அரைத்துக் கொதிக்க விட்டால் மோர்க்குழம்பு திக்காக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com