11 வயதில் திருக்குறள், நல்வழி, குறிஞ்சிப்பாட்டு!
அகோபிலம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி விசாலாட்சி, 1330 திருக்குறள் மற்றும் "நல்வழி', "குறிஞ்சி பாட்டு' போன்றவற்றை மனனம் செய்து ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். இதற்காக பல விருதுகளை பெற


அகோபிலம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி விசாலாட்சி, 1330 திருக்குறள் மற்றும் "நல்வழி', "குறிஞ்சி பாட்டு' போன்றவற்றை மனனம் செய்து ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். இதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
இது குறித்து அவரது தாயார் உமா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""நாங்கள் வசிக்கும் பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், திருக்குறள் கழக அமைப்பினர் திருக்குறள் போட்டி ஒன்றை நடத்தினர். அந்தப் போட்டியில் விசாலாட்சி கலந்து கொண்டார். அப்போது அவள், 2 - ஆம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கொடுத்த கால கெடுவுக்குள் 120 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிவித்தாள். அண்ணாநகர் டவர் பார்க்கில் ஓபன் ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டில் விசாலாட்சிக்கு சிறப்பு பரிசு பெற்றார். விழாவிற்கு வந்திருந்த பலரும் அவளை பாராட்டினர். அப்போதுதான், அவருக்கு நினைவாற்றால் நன்றாக இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். இதனால், மேலும் சில திருக்குறளை கற்றுக் கொடுக்க தொடங்கினேன். முதலில் அதிகார தலைப்புகளை மட்டும் கற்றுக் கொடுத்தேன். அதன்பின்னர், ஒவ்வொரு திருக்குறளாக கற்றுக் கொடுக்க தொடங்கினேன். தற்போது, 1330 குறளும் சொல்லும் அளவிற்கு பயிற்சி பெற்றுவிட்டாள். அவ்வப்போது, ஆங்காங்கே நடைபெறும் சின்னப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்று வருகிறாள்.
இதனையடுத்து பெல்ஸ் அகாதெமி ஆன் லைனில் நடத்திய திருக்குறள் போட்டியிலும் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார். இது தவிர, தமிழ் வருடங்களின் 60 பெயர்களும், ராசிகள், நட்சத்திரங்கள், நல்வழி, குறிஞ்சி பாட்டு போன்றவற்றிலும் பயிற்சி பெற்றிருக்கிறாள். இதையெடுத்து தற்போது குறளின் பொருளை கற்று வருகிறாள்'' என்கிறார் உமா ராதாகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...