பாட்டி வைத்தியம்!

பித்த கோளாறினால்  தலைச்சுற்று  ஏற்படுவது உண்டு.  சிறிது  இஞ்சி.  கொத்து மல்லிவிதை  இரண்டையும்  வைத்து மைய்ய அரைத்து,  தேனில்  கலந்து சாப்பிட்டால்  தலைச்சுற்று  நீங்கும்.
பாட்டி வைத்தியம்!

பித்த கோளாறினால் தலைச்சுற்று ஏற்படுவது உண்டு. சிறிது இஞ்சி. கொத்து மல்லிவிதை இரண்டையும் வைத்து மைய்ய அரைத்து, தேனில் கலந்து சாப்பிட்டால் தலைச்சுற்று நீங்கும்.

சீதாப்பழ விதைகளைப் பொடித்து கடலை மாவுடன் கலந்து, எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி உதிராது. பொடுகு, ஈர்கள் அழியும்.

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், குண்டு உடம்பு வாகு கணிசமாக சீராகும்.

இரண்டு வெற்றிலையுடன் மூன்று ஏலக்காய் வைத்து மென்றுதின்று இரண்டு தம்ளர் சுடுநீர் பருகினால், தொடர் வாந்தி நிற்கும்.

கருஞ்சீரகத்தை காடிவிட்டு விழுதாக அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பூசி வர, கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்பட்டு, விரைவில் குணமாகும்.

அரசு இலைகளின் சாறுடன் மஞ்சள்தூள் கலந்து காலிலுள்ள வெடிப்புகளின் தடவி வர வெடிப்புப் புண்கள் ஆறும்.

துளசி இலைச்சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர, சளித்தொல்லை குணமாகும். உடல் சோர்வு நீங்கும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோரிலிட்டு சிறிது உப்பும் சேர்த்து சாப்பிட்டால், உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

தூக்கமில்லாது அவதிப்படுவோர், இரவு ஒரு செவ்வாழைப்பழம் தின்று, ஒரு டம்ளர் பசும்பால் குடித்தால், நிம்மிதியான தூக்கம் வரும்.

சிறு குறிஞ்சான் இலைச்சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.

ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால், சிறிது கடுகுடன் பசும்பால் தெளித்து விழுதாக அரைத்துப் பற்றிட, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று, சூடான நீர் குடித்தால், வாயுத் தொல்லை நீங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com