வெள்ளரிக்காய் புதினா லெமனேட் 

வெள்ளரிக்காயின் தோலை சீவி அதை சிறு சிறு துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய் புதினா லெமனேட் 

தேவையானவை: 

பெரிய வெள்ளரிக்காய் - 1
புதினா இலைகள் - 15 -20
எலுமிச்சை பழம் - 5
சர்க்கரை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
ஐஸ்க்யூப்ஸ் - தேவைக்கேற்ப

செய்முறை: 

வெள்ளரிக்காயின் தோலை சீவி அதை சிறு சிறு துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.  புதினா இலைகளை  ஆய்ந்து சுத்தம் செய்து  வைத்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில்  அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து, சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சவும்.  பின்பு,  எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாறை எடுத்துக் கொள்ளவும்.  அதனுடன்  4 அல்லது 6 புதினா இலைகளை போட்டு வைக்கவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி துண்டுகளை  மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 8 லிருந்து 10 புதினா இலைகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அடித்து வடிக்கட்டிக் கொள்ளவும்.  அதனுடன், சர்க்கரை சிரப்பை விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து  கலந்து கொள்ளவும்.   சர்க்கரை விரும்பாதவர்கள் தேனை சேர்க்கவும். சர்க்கரை மற்றும் தேனை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக உப்பை சேர்த்து கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com