கிராமி விருது பெற்ற  இந்திய பாடகி!

ரசிகர்களால் ஃ பாலு என்றழைக்கப்படும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பிரஜையான ஃ பால்குனிஷா, இந்த ஆண்டு நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான சிறந்த பாடல் ஆல்பத்தை
கிராமி விருது பெற்ற  இந்திய பாடகி!

ரசிகர்களால் ஃ பாலு என்றழைக்கப்படும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பிரஜையான ஃ பால்குனிஷா, இந்த ஆண்டு நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான சிறந்த பாடல் ஆல்பத்தை இசையமைத்து பாடியதற்கான கிராமி விருதினைப் பெற்றுள்ளார்.

மும்பையில் பிறந்து வளர்ந்து, தற்போது நியூயார்க் சிடியில் வசிக்கும் ஃ பால்குனிஷா, இந்திய இசையையும், மேற்கத்திய இசையையும் இணைத்து எ கலர்புல் வோர்ல்ட் என்ற தலைப்பில் பாடி இசையமைத்து வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான இசை ஆல்பம் கிராமி விருது பெற்றிருப்பது இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல இந்திய இசையமைப்பாளர்களும், இசைக் கலைஞர்களும் இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் தன்னுடைய குழந்தை பருவத்தைப் பற்றியும், குழந்தைகளுக்கான இசை ஆல்பத்தை உருவாக்க காரணம் என்ன என்பது பற்றியும் இங்கு விளக்குகிறார் ஃ பால்குனிஷா .

நான் பிறந்து வளர்ந்தபோது, சிறு வயது முதலே எனக்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டதற்கு என் அம்மாவே காரணம் என்று சொல்லலாம். அம்மா நல்ல பாடகி என்பதால் என் ஆர்வத்தை கண்ட அவர், மூன்று வயது முதலே எனக்கு இசைத்துறையில் பிரபலமான கவ்முடி முன்ஷி, உதய் மஜூம்தார், உஸ்தாத் சுல்தான் கான், கிஷோரி அமோன் கர் போன்றவர் மூலம் பாடவும், இசை பயிற்சியும் அளித்தார். என்தந்தையும் நான் விரும்பிய இசைக் கருவிகளை வாங்கி தந்து உற்சாகப் படுத்தியது போல், இன்றுவரை என்அம்மாவும் எனக்கு பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

மும்பையில் உள்ள பாய்தாஸ் ஹாலில் பிரபல இசை வித்வான்கள் நிகழ்ச்சிகள் நடக்கும் போதெல்லாம் என் பெற்றோர் என்னை அழைத்துச் செல்வதுண்டு. இங்கு போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

என்னுடைய குழந்தைகளுக்கான இசை ஆல்பங்களை தேடிய போது, மிக குறைவாக இருப்பது தெரிந்தது. அப்போதுதான் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதி இசையமைத்து பாடி ஆல்பம் வெளியிடும் எண்ணம் தோன்றியது.

மேலும் என்னுடைய குழந்தைகளும் தங்கள் அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று கேட்டார்கள். இதேபோன்று பல நாடுகளில் உள்ள குழந்தைகளும் தங்கள் இனம், நிறம் அல்லது பின்புலம் குறித்து எப்படி வெளிப்படுத்துவது என்ற தயக்கத்தில் இருப்பது தெரிந்தது.

கிராமி நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான சிறந்த இசை ஆல்பம் பிரிவில் எனக்கு விருது கிடைக்குமென்று எதிர்பார்க்கவே இல்லை.

மீண்டும் ஒருமுறை இந்தியா வந்து நான் பிறந்த மண்ணையும், உறவினர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. கூடவே, அமெரிக்க இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்களுடன் இணைந்து இசை ஆல்பத்தை உருவாக்கியது போல், பாலிவுட் படங்களில் இந்திய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாட வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது'' என்கிறார் ஃ பால்குனிஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com