சமையலறை பாதுகாப்பு!

சமையலறை என்பது மிகவும் முக்கியமான ஓர் அறையாக வீட்டில் இருக்கின்றது. ஆரோக்கியம் இந்த அறையில் துவங்க எப்பொழுதும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
சமையலறை பாதுகாப்பு!


சமையலறை என்பது மிகவும் முக்கியமான ஓர் அறையாக வீட்டில் இருக்கின்றது. ஆரோக்கியம் இந்த அறையில் துவங்க எப்பொழுதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சமையலறையில் சமையல் மட்டும் அல்லாமல் எளிதான முறையில் பராமரிப்பது என்பது கூட ஒரு கலை தான். சமையல் அறையையும், அதில் இருக்கும் பொருட்களையும் எவ்வாறு கனகச்சிதமாக கையாளலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சமையலறையில் இருக்கும் செல்ஃப்களில் அடிக்கடி எறும்பு தொல்லை வருகிறது என்றால் கொஞ்சம் தண்ணீரில் வினிகர் கலந்து செல்ஃப்களை துடைத்து உலர விட்டு பின்னர் டப்பாக்களை அடுக்கி வையுங்கள், ஒரு எறும்பு கூட அந்த பக்கம் வராது.

கேஸ் ஸ்டவ் உபயோகிப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அதில் இருக்கும் பர்னரில் இருந்து வெளியாகும் சூட்டின் காரணமாக "பிடிஎஃப்இ' எனப்படும் நச்சு வாயு வெளியேறுகிறது. இதன் தீவிரத்தை குறைக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம், செராமிக் போன்ற பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது. மேலும் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தினால் இந்த விஷ வாயு தானாகவே வெளியேறிவிடும்.

உங்களிடமிருக்கும் எலக்ட்ரானிக் சமையல் உபயோக பொருட்களான மிக்ஸி, மைக்ரோ ஓவன், ஃப்ரிட்ஜ் போன்றவை சுத்தமாக இருக்க அதிகம் மெனக்கெடாமல் கொஞ்சம் தண்ணீரில் பற்பசையை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பஞ்சை கொண்டு நனைத்து நன்கு பிழிந்து துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரில் துடைத்து உலர விட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பிரிட்ஜ் முழுவதும் கெட்ட பாக்டீரியாக்கள் உலவும் எனவே எந்த ஒரு உணவு பொருளையும் திறந்த நிலையில் வைக்கக் கூடாது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு எனவே ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி மூலைக்கு ஒன்றாக வைத்து விடுங்கள். வெங்காய வாடை அடிக்காமல் இருக்க, ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதே போல் அதன் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் ஒரு முறை கடைசியாக தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உணவு பொருட்கள் இடுக்குகளுக்குள் நுழைந்து பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கும்.

எண்ணெய் ஊற்றி வைக்கும் பாத்திரங்கள் ரொம்ப எளிதாக சுத்தம் செய்ய வேண்டுமென்றால் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு அரிசி மாவு கொண்டு அழுத்தம் கொடுத்து நன்கு உள்ளேயும், வெளியேயும் தேயுங்கள். பிறகு உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்கள், பளிச்சென பிசுபிசுப்பு போய்விட்டு மின்ன ஆரம்பித்துவிடும்.

சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்திருக்க வேண்டும். இதனால் கரப்பான் பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்கும். சமையல் அறை இருட்டாக, ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் புழுக்களும், வண்டுகளும், பூச்சிகளும் படை எடுக்க ஆரம்பிக்கும் எனவே ஈரமில்லாமல் வெளிச்சமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ரவை, மைதா போன்ற பொருட்களில் பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வையுங்கள். அதே போல பயறு வகைகளை லேசாக வறுத்து பின்னர் டப்பாக்களில் அடைத்து வைத்தால் பூச்சிகள் வராமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com