தேங்காய்ப் பால் இனிப்பு பூரி

தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி, 2 சிட்டிகை உப்பு. தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
தேங்காய்ப் பால் இனிப்பு பூரி


தேவையானவை:

மைதா மாவு - அரை கிலோ
தேங்காய் - 1
முந்திரிப் பருப்பு - 20
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 400 கிராம்
கடலை எண்ணெய் - 400 கிராம்
ஏலக்காய் - 8
ஜிலேபி பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி, 2 சிட்டிகை உப்பு. தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து கொள்ளவும். ஏலக்காய், முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுத்து பொடி செய்து பிசைந்த மாவுடன் கலந்து கொள்ளவும். மீதமுள்ள நெய்யையும் மாவில் ஊற்றிப் பிசைந்து சிறு சிறு பூரிகளாக வட்டமாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை அதில் கொட்டி பாகு போல் காய்ச்ச வேண்டும். பாகு கம்பிப் பதத்தில் வரும் பொழுது, ஜிலேபி பவுடரை அதில் தூவிக் கிளற வேண்டும். அதில் பொரித்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பாகு சுற்றிலும் படும்படி நன்றாகக் கிளறிவிட வேண்டும். இந்தப் பூரிகளை ஒரு தட்டில் எடுத்துப் போட்டு ஆற விட வேண்டும். இதுவே தேங்காய்ப் பால் இனிப்பு பூரிஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com