பெண் கல்வி: பெரும் கொடை!

அரசுப்பள்ளி மாணவர்களும் போற்றப்பட வேண்டும், தனக்கான பாதைகளை அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக "எஸ்.டூ.எஸ்' என்ற நிறுவனம் பலத்தரப்பட்ட நிகழ்வுகளை நேரடியாகவும் இணையத்தில் நேரலையாகவும் செய்து
பெண் கல்வி: பெரும் கொடை!

அரசுப்பள்ளி மாணவர்களும் போற்றப்பட வேண்டும், தனக்கான பாதைகளை அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக "எஸ்.டூ.எஸ்' என்ற நிறுவனம் பலத்தரப்பட்ட நிகழ்வுகளை நேரடியாகவும் இணையத்தில் நேரலையாகவும் செய்து கொண்டு வருகின்றனர். மிக முக்கியமாக அரங்கத்தில் நடக்கும் நிகழ்வை எப்படி தொகுத்து வழங்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துள்ளனர். ஒரு படி மேலே சென்று சிறந்த ஆளுமைகளை எப்படி நேர்காணல் செய்வது இதையும் தற்போது அம்மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர். 

இந்நிறுவனம் இம்மாதம் 12-ஆம் தேதி வலைத்தமிழ் டிவியோடு இணைந்து  "அரசுப்பள்ளி மாணவியரும் - ஆளுமைப் பெண்களும்' என்ற தலைப்பில் இணையம் மூலமாக ஒரு நிகழ்வை நடத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக  கலந்து  கொண்ட பேராசிரியை முனைவர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியது: 

""ஒரு  ஆசிரியர் வகுப்பறையின் கரும்பலகையில் எழுதும் போதும் அதைப் பார்க்கிற, நல்ல ஈடுபாடுள்ள அனைத்து குழந்தைகளின் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அதைவிட உடல் மொழி, சைகை பாஷை எல்லாமே அக்குழந்தைகளும் செய்யக் கூடியதாக இருக்கும். இவற்றை வீட்டிலுள்ள பெற்றோர் உடனடியாக இதை கண்டறிய முடியும். அரசுப்பள்ளியும் ஆளுமைகளும் என்ற பட்டியலுக்குள் சேர்வதற்கு நான் பொறுத்தமான பெண்மணி ஏனென்றால் நானும் அரசுப்பள்ளி மாணவி தான். அதில் மிகுந்த கர்வமும், பெருமையும், நன்றிக்கடனும் பட்டுட்டுள்ளேன். அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கிடைக்கக் கூடியது என்ன? கிடைக்காமல் போவது என்ன? கிடைக்க வேண்டியது என்ன? இந்த பட்டியல் எல்லாம் பார்க்கும் போது மிகவும் நீண்டவை. 

குழந்தைகளே  கல்லையும் முல்லையும் எடுத்து பாதையை பண்படுத்தி செல்லக்கூடிய ரவி. சொக்கலிங்கம் என்ற ஒரு நபர் உங்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்களுடைய காலகட்டத்தில் அப்படி ஒரு நபர் இல்லை என்பது உண்மைதான். ஆனால் சமுதாயத்தில் வாழ்ந்த பெருந்தலைவர்கள்; எங்களுக்கு முன்னால் செல்ல நாம் அவர்கள்; பின்னால் வருவதற்கு பாதைகளை அமைத்த தலைவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது தான் நாங்கள் தப்பித்து வந்தற்கான சான்று. 

கல்வி என்பது கொடை என்று தான் நான் தொடங்கப் போறேன் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கு ஒட்டு மொத்தமாகவே  கல்வி மிகப்பெரிய கொடை.  இக்கொடைக்கு நீங்கள் வட்டியுடன் எதை திருப்பி செலுத்தினாலும் அதற்கு ஈடு இணையில்லை. மழை,  தாய்ப்பால், தந்தையின் கண்டிப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு மற்றும் அரவணைப்பு அது சார்ந்த வழிநடத்தல் இதெல்லாம் பெரும் கொடை என்று சொல்வோம். 

அனுபவித்துக் கொண்டு இருக்கிற நாம் நம்முடைய நன்றிகடனை செலுத்தினால் மட்டுமே மிகப்பெரிய பிரதிபலன். பெண் கல்வி என்பது பெருங் கொடை, இந்த கொடையை நீங்கள் பெற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கிட்டத்தட்ட 15ஆண்டுகள் கழித்து பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இப்போது கிடைக்கும் அளவிற்கு வித, விதமாக உணவு, ஆடை எல்லாம் அப்போது கிடைக்கவில்லை ஆனால் நன்றாக கல்வி கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தாமல்; பாடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் தோள் கொடுத்து தூக்கி விட யாரும் கிடையாது. 

அடுத்த நிமிடம் சொல்லக் கூடியது என்னவென்றால் திருமணம் செய்து கொடுப்பது தான். 15,16,17 வயதெல்லாம் கணக்கு கிடையாது. அத்தை மகள், மாமன் மகள் எல்லோருக்கும் திருமணம் நடத்திருக்கும். ஆனால் நான் இதிலிருந்து தப்பித்து 11-ஆம் வகுப்பு படிக்கத் தொடங்கினேன். அந்நேரத்தில் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுப்புடன் படித்தோம். இது தான் நாங்கள் கொடுத்து வைத்தது. எங்களுடைய ஆசிரியர்கள் நமது சூழ்நிலையை உணர்ந்து ஒரு நாளும் வறுமையை கேலி செய்தது கிடையாது.

மீண்டும் மீண்டும் ஊக்குவித்து நம்மை மேலே கொண்டு போனவர்கள். தோசையம்மா.. தோசை.. இந்த பாடலுக்குள் இந்தியாவின் பொருளாதாரமே அடங்கியிருந்தது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் பண்டிகை காலங்களில் தான் பலர் வீட்டிற்குள்ளேயே தோசை வரும். அப்பாடலில் அப்பாவுக்கு நான்கு, அம்மாவிற்கு மூன்று, அண்ணனுக்கு இரண்டு, பாப்பாவுக்கு ஒன்று. தின்ன.. தின்ன ஆசை.. திருப்பிக் கேட்டால் பூசை. இன்னும் ஒன்று கிடைக்குமா என்று கேட்டால் அடி தான் கிடைக்கும். 

இது எல்லோரும் பாடிய பாடல் என்றாலும் பெருவாரியான நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நிலைமை இப்படித்தான் இருந்தது. இதற்கு நடுவில் தான் அரசுப்பள்ளிகள் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன. உணவு கொண்டு வரவில்லை என்றால் ஆசிரியர் தன்னுடைய உணவு பெட்டகத்தை எடுத்து கொடுத்து நம்மை சாப்பிட சொல்வார். நம்மிடம் உள்ள பேனாவை பார்த்தோம் என்றால் கழுத்து. மூடி எல்லாம் தனிப்பட்ட அழுக்கு நிறங்களில் தெரியும்.

சுதந்திர காலங்களில் இந்நாட்டில் ஒரு பேனா வாங்குவது என்றால் அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்கிற நிலைமையில் இருந்தோம். இங்கே வாழ்கிற அத்தனை மக்கள் வயிற்றுக்கும் படிப்பு, கல்வி ஆடம்பரம் தான். இன்னும் அத்திவாசிய தேவையாக அது மாறவில்லை. நாம் வேண்டும் என்றால் சொல்லிக் கொள்ளலாம் அது ஆடம்பரம் இல்லை என்று பல பேருக்கு அது கைக்கு எட்டாத கனிதான். அத்தனை வயிற்றுக்கும் சோறும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவித்த நிலைமையும் உண்டு. 

அந்நிய தேசங்களில் உணவுப் பொருள்களுக்கு கையேந்நிய நிலைமையும் உண்டு. இதன் தொடர்ச்சியாக உருவாகிய பசுமைப்புரட்சி, வெண்மைபுரட்சி, நீலப்புரடசி போன்றவற்றால் விஞ்ஞானம் தலையெடுக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று வேலை சோறு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டு வேலை சரியாக கிடைத்தது. 

மிகையாய் இருக்கும் போது மிதமாய் செய்வதற்கு கற்றுக் கொடுத்தது எங்கள் வாழ்க்கை. இந்தியாவுடைய வரைப்படம் வரையும் போது அழிப்பதற்கான உபகரணம் இல்லாமல் எச்சில் தொட்டு திருத்தம் செய்வோம். ஒரு தவறை ஒருவர் செய்தால் பரவாயில்லை ஆனால் ஒட்டுமொத்த வகுப்பே அத்தவறை செய்யும். ஆனால் ஆசிரியருக்கும் தெரியும் கண்டு கொள்ளாமல் மீண்டும் அத்தவறு ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னோடியாக திகழ்வார். தன்னுடைய பொறுப்பை உணர்ந்து எதிர்காலத்தில் இந்த குழந்தைகள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அன்றைய அரசுப்பள்ளி ஆசிரியர்கள். வறுமை, சிக்கனம் கேட்டது எதுவுமே கிடைக்கவில்லை என்பது ஒரு பொருட்டும் அல்ல. 

கனவு காண வேண்டும். என்று சொன்னால் தனிநபருடைய ஆசைகள் ஒரு நாட்டையே முன்னால் கொண்டு வராது.  ஒரு தலைமுறையே ஆசைப்பட்டு ஒற்றை கனவுகளாக மாற்றுவோமானால் இது தான் உண்மையானக் கனவு. சுதந்திர போராட்டத்திற்கு பாடுப்பட்ட அத்தனை பேரும் ஒற்றைக் கனவு கண்டார்கள் கல்வி கிடைத்தது. இதைத்தான் பெருங்கொடை என்றோம். மதிப்பு வாய்ந்த பெண்கள் மதிப்பெண்களைத் தான் வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com