முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
மாம்பழ சர்பத்
By DIN | Published On : 15th May 2022 06:00 AM | Last Updated : 15th May 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
மாம்பழங்கள்-5, சர்க்கரை- 400 கிராம்.
செய்முறை:
நன்றாகப் பழுத்துக் கனிந்த மாம்பழங்களின் தோலை மெல்லியதாகச் சீவிக் கொள்ள வேண்டும். சிறு துண்டுகளாக நறுக்கி கொட்டையை நீக்கி கசக்கி, சாறு பிழிந்து துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் திடமான நீரைவிட்டு சர்க்கரை சேர்த்து, பாகாகக் காய்ச்சி பதமாகப் பாகு ஆனவுடன் மாம்பழச் சாற்றைக் கலந்து நன்றாகக் கிளறிவிட வேண்டும். தேன் பதமாய் பார்த்துக் கீழிறக்கி ஆறவிட வேண்டும். பாட்டில் எடுத்து வைத்துகொண்டு, சர்பத் செய்யும்பொழுது குளிர்ச்சிக்காக ஐஸையும் தண்ணீரில் ஊற வைக்க வைத்து, "சபீஜா' விதைகளையும் பானத்துடன் கலந்து உபயோகித்தால் வெயிலில் மிகுந்த கோடைக்கு இந்தச் சர்பத் அருந்த குளுகுளுவென்று இருக்கும்.