புலுசு வடா (ஆந்திரம்)
By ந.கிருஷ்ணவேணி | Published On : 25th September 2022 06:00 AM | Last Updated : 25th September 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 1 கிண்ணம்
துவரம் பருப்பு- கால் கிண்ணம்
கடலைப் பருப்பு-1 மேசைக் கரண்டி
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல்-6
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பு தனியாக ஊற வைக்கவும். பச்சரிசி, துவரம் பருப்பை ஊற வைக்கவும். நீரை வடித்து, உப்பு, புளி, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து நைசாக அரைக்கவும், ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்த்து வடைகளாக, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.