தேனின் மகத்துவம்
By நெ.இராமகிருஷ்ணன் | Published On : 25th September 2022 06:00 AM | Last Updated : 25th September 2022 06:00 AM | அ+அ அ- |

வெறும் வயிற்றில் தேன் உட்கொண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும்.
ஒரு தேக்கரண்டி தேனை காலை, மாலை சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
இரவில் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டு அருந்தினால் நன்றாகத் தூக்கம் வரும்.
தேனில் ஊற வைத்த இஞ்சித் தூண்டுகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு உட்கொண்டால் உடல் சோர்வு அகலும்.
முருங்கை இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து உட்கொள்ள குரல் தெளிவடையும்.
இஞ்சிச் சாறில் தேனைவிட்டு எலுமிச்சைச் சாறையும் சிறிது சிறிதாகச் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட இரத்த அழுத்தம் கட்டுப்படும்.