ஜன்னல் திரைகளைத் தேர்வு செய்கிறீர்களா?

வீடுகளில் ஜன்னல் திரைகளைத் தேர்வு செய்வோர் கவனிக்க வேண்டியவை:
ஜன்னல் திரைகளைத் தேர்வு செய்கிறீர்களா?

வீடுகளில் ஜன்னல் திரைகளைத் தேர்வு செய்வோர் கவனிக்க வேண்டியவை:

ஜன்னல் திரைகளுக்கு வீட்டின் அழகைக் கூட்டுவதில் பெரும் பங்கு உண்டு. 

வீட்டுச் சுவரின் நிறத்தையும், சோபாவின் நிறத்தையும் பொருத்து திரைகளின் நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் .

திரைகள் பிரதான ஸ்கிரீன், மெல்லிய துணி ஸ்கிரீன், இரண்டடக்கு ஸ்கிரீன் (மெல்லிய, பிரதான ஸ்கிரீன்), என மூன்று வகைகள் உள்ளன. 

ஸ்கிரீன்கள் பருத்தி, பாலியஸ்டர்மிக்ஸ், பாலியஸ்டர், வெல்வெட் கலந்த பாலி சில்க் போன்ற துணி வகைகளில் தற்போது அதிகம் இருக்கிறது. 

திரைகளின் தரம், விதவிதமான அளவில் ரெடிமெட் ஸ்கிரீன்களும் கடைகளில் கிடைகின்றன.

வீட்டிலில் இருக்கும் ஒவ்வொரு அறையைப் பொருத்து திரைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

படுக்கையறைக்கு வெளிச்சத்தை மறைக்கும்படி திக்கான துணியில், டார்க் நிறத்தில் இருக்க வேண்டும்.   அதனால் இரவில் வெளிச்சம் வராமல் இருக்கும். நல்ல தூக்கம் வரும். 

வரவேற்பறைக்கு வெளிச்சம் வரும் வகையில் வேறு விதமான ஸ்கிரீன்களாக இருக்கலாம்.

பால்கனி போன்ற அதிக வெயில் வரும் இடங்களில் மூங்கிலிலான ஸ்கிரீன்களை போடலாம். 

வெயில் அதிகம் வரும் நேரத்தில் அவற்றை பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேர்த்தில் அவற்றை சுருட்டி வைக்கவும் இயலும்.

வீட்டில் பொதுவாக ஸ்கிரீன் அமைக்கும் போது வெளியில் இருந்து பார்த்தால், அறைக்குள் இருப்பவை தெரியாமலும், புற வெளிச்சம், வெப்பம் ஆகியவை அறைகளுக்குள் பரவாதவாறும் ஸ்கிரீன்கள் அமைக்க வேண்டும். அதே சமயம் தேவையான அளவு காற்றோட்டம் வரும் வகையிலும் இருக்க வேண்டும்.

ஸ்கிரீன்களை தேர்வு செய்யும்போது, அதை மாட்டும் கம்பிகளையும் தேர்வு செய்வது அவசியம். 

வெளியிலிருந்து வரும் தூசிகள் ஸ்கிரீன்களில் படியும். நாளுக்கு நாள் அந்த தூசி அதிகரிக்கும் என்பதால் வாரம் ஒரு முறையாவது ஸ்கிரீன்களை துவைப்பது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com