தினமும்  6 மணி நேரப் பணி; ஆண்டு வருமானம் ஒரு கோடி

இங்கிலாந்தில் வாழும் ரோமா நோரிஸ்   வாரத்துக்கு  ஆறு மணி நேரம்  மட்டுமே பணிபுரிகிறார். ஆனால்,  அவரது ஆண்டு வருமானம்  இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்.
தினமும்  6 மணி நேரப் பணி; ஆண்டு வருமானம் ஒரு கோடி
Published on
Updated on
1 min read


இங்கிலாந்தில் வாழும் ரோமா நோரிஸ் வாரத்துக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பணிபுரிகிறார். ஆனால், அவரது ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்.

கணினித் துறையில் சிலருக்கு இந்த அளவுக்கு ஊதியம் என்றாலும் தினமும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். நாற்பது வயதாகும் ரோமா நோரிஸ் "யூ டியூபரும்' இல்லை. தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் பிரபலமானவரும் அல்ல! பிறகுஎப்படி ஆண்டில் 288 மணி நேரம் மட்டும் வேலை செய்து, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்?

ரோமா பெற்றோர்களுக்கு ஆலோசனை மையத்தை நடத்தி, வழிகாட்டும் பணியை கடந்த 17 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். ஒரு மணி நேர கவுன்சிலிங்குக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கட்டணமாகப் பெறுகிறார். குழந்தையை முதன்முதலாகப் பெறும் தம்பதியருக்கு குழந்தையை எப்படி தூங்க வைப்பது, தாய்ப்பால் எப்படி ஊட்டுவது, சத்தான உணவை குழந்தைகளுக்கு எப்படி தயாரிப்பது, அந்த உணவை குழந்தைகள் எப்படி சாப்பிட வைப்பது, நல்ல புத்திசாலி குழந்தைகளாக எப்படி வளர்ப்பது, குழந்தைகளிடம் எப்படி பேசவோ பழக்கவோ வேண்டும் போன்ற தலைப்புகளில் ஆலோசனைகளை ரோமா வழங்கி வருகிறார். பட்டப் படிப்பை நிறைவு செய்ய முடியாமல் ரோமா இரண்டு முறை கல்லூரியிலிருந்து விலகியவர். நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் போக, இதர நேரங்களில் ரோமா குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com