வாழைத் தண்டு காரப் பொரியல்

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும்.
வாழைத் தண்டு காரப் பொரியல்

தேவையானவை:

வாழைத் தண்டு- 1
மோர்- 100 கிராம்
மஞ்சள் பொடி- 1 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
மிளகாய்த் தூள்-2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
சோம்பு- கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 ஆர்க்கு

செய்முறை:

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து மோரை வடிகட்டி, தண்டை மட்டும் எடுக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, வாழைத் தண்டைப் போட்டு வதக்கி,  ஐந்து நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com