சமையல் குறிப்புகள்...

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.
சமையல் குறிப்புகள்...

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிற இலைகள் அதிகம் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும்.  ஓட்டைகள், பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக் கூடாது.

தொண்டை கட்டிக் கொண்டால், கற்பூரவல்லி சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து, மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியோடு இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, சில துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சுவையான பச்சடி தயார்.

சூப்புகள் செய்யும்போது, சோளமாவு அல்லது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடித்து, சலித்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.

பச்சை கொத்தமல்லித் தழையை துவையலுக்கு அரைக்கும்போது, புளிபோடுவதற்குப் பதில் ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

கீரையை புளி ஊற்றிக் கடையும்போது, அத்துடன் சில மோர் மிளகாய் வற்றலை வறுத்துப் போட்டு கடைந்தால் ருசியாக இருக்கும்.

கீரை சமைக்கும்போது, ஒரு மிளகு அளவிலான வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பை கலந்தால், கீரை வெந்த பிறகும் நிறம் மாறாமல் இருக்கும்.

வாழைக்காயை பிரிட்ஜ்ஜில் வைக்கும்போது, இரண்டாக நறுக்கி வைத்தால் கருப்பாகாமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com