வெப்ப அலையில் இருந்து தப்பிக்க..?

வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழலில் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
வெப்ப அலையில் இருந்து தப்பிக்க..?

*வெயில் கொளுத்தும் நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.  உடலின் மீது காற்று படும்படி வெளிர் நிற உடலை இருக்காத ஆடைகளை அணிய வேண்டும்.
*வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழலில் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
*தர்பூசணி,  திராட்சை போன்ற நீர் சேர்த்து நிறைந்த பழங்களையும்,  வெள்ளரிக்காய்,  தக்காளி போன்ற காய்கனிகளையும் 
சாப்பிடலாம்.
*நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்  அதிகம் உள்ளதால், தயிர் சாப்பிடலாம்.
*தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது அவசியம்.  வெளியே செல்லும்போது 
தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது.
*'வெயிலில் பணியாற்றுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.  இருந்தால் கழுத்து,  முகம், தலை, கை ஆகிய 
பகுதிகளைத் துணிகளை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.
*மோர்,  எலுமிச்சை,  பழரசம்,  நீராகாரம்,  ஓ.ஆர்.எஸ் உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும்.
*சோடா போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இவை உடலில் நீச்சத்தைக் குறைத்து வறட்சி ஏற்படுத்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com