ஜீன்ஸ் அணியும் பெண்களா?

ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப பெண்களின் அழகை ஜீன்ஸ் கூட்டுகிறது. ஜீன்ஸின் மாடல்களும், பயன்களும்...:
ஜீன்ஸ் அணியும் பெண்களா?

ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப பெண்களின் அழகை ஜீன்ஸ் கூட்டுகிறது. ஜீன்ஸின் மாடல்களும், பயன்களும்...:

* 'ஸ்கின்னி பிட்' ஸ்டைல் ஜீன்ஸ் தொடையுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும்.

* 'ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட்'  என்ற வகை டெனிம்கள் இடுப்பிலிருந்து விளிம்பு வரை நேராக இருக்கும்.

* 'ரிலாக்ஸ்டு ஃபிட்' வகைகள்  வழக்கமான ஜீன்ஸ்களைவிட தளர்வாக இருக்கும். செளகரியமாக உணர வைக்கும்.  கோடைகாலத்துக்கு ஏற்றவை. சமீபத்தில் இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த வகை ஜீன்ஸ் அனைத்து உடல் வகைகளுக்கும் ஏற்றது. 

* 'பூட்கட் ஜீன்ஸ் ரெட்ரோ' ஜீன்ஸ் சாயலுடன் இருக்கும். இதன் விரிந்த கீழ் பாதி இடுப்பு அளவுடன் சமனாக அமைந்து உயரமாகத் தோன்ற வைக்கும்.

*'லோ ரைஸ் ஜீன்ஸ்' வகை ஜீன்ஸ்கள் தொப்புளுக்கு 2 இஞ்ச் கீழே உட்காரும். 

* 'மிட்-ரைஸ்' ஜீன்ஸôனது அனைத்து உடல் வகைகளுக்கும் இது வசதியாக இருக்கும். இது தொப்புளுக்கு சற்று கீழே பொருந்தும். உருவத்துக்கு ஏற்ற வகையில் இது அமைந்துகொள்ளும்.

* 'ஹை ரைஸ்'  வகைகள் தொப்புளுக்கு 2 இஞ்ச் மேலே இது உட்காரும். இடுப்பு வளைவில் பொருந்தி எடுப்பான தோற்றத்தை அளிக்கும்.
 

-செளமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com