மஞ்சணத்தி தெரியுமா?

மஞ்சணத்தி மரமானது நுணா, தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.  இதன் வேர் முதல் இலை வரை முழுதும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. 
மஞ்சணத்தி தெரியுமா?
Published on
Updated on
1 min read

மஞ்சணத்தி மரமானது நுணா, தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.  இதன் வேர் முதல் இலை வரை முழுதும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. 

மருத்துவப் பயன்கள்

மஞ்சணத்தி தாவரத்தை மருந்தாக எடுத்துகொண்டால், நோயால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்.  

இலை, காய், பழங்கள் அனைத்துமே வீக்கம்,  கட்டிகளைக் கரைக்கும். குழந்தைகளுக்கு வரும் கரப்பான், புண்கள், கழலைகளை குணமாக்கும்.

5 மஞ்சணத்தி இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து , ஒன்றிரண்டாக நசுக்கி ஒரு லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து கொண்டு தினமும் இரு வேளைகளில் 20 மி.லி. வீதம் குழந்தைகளுக்கு கொடுத்தால் மாந்தம், கழிச்சல் ஆகியன குணமாகும்.

புண்கள், சிரங்குகள் உள்ள இடத்தில் மஞ்சணத்தி இலையை அரைத்து பூசினால் எளிதில் குணமாகும்.

மஞ்சணத்தி காய்களைச் சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து பத்திரப்படுத்திக் கொண்டு  தினமும் பல் துலக்கினால் சொத்தை வராது.

10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் பேதி நின்றுவிடும்.

5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து, வதக்கி, இவற்றுடன் 2 கிராம் சுக்கு, மிளகு, ஒரு தேக்கரண்டி ஓமத்தை நசுக்கி,   அரை  லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி  மூன்று தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.

5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து இவற்றை வதக்கி, இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி இரு வேளையும், வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் குணமாகும்.

நொச்சி, உத்தமணி, பொடுதலை இலை சாற்றுடன் ஒரு அளவு மஞ்சணத்தி இலை சாறு கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான இரைப்பை பிரச்னைகளும் முற்றிலும் தீரும்.

சிறிது மிளகுத் தூள், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து, மஞ்சணத்தி இலை மற்றும் பழத்தின் விழுதுடன் சேர்த்து கொதிக்க வைத்து, 50மி.லி. மற்றும் 100மி.லி. வீதம் 48 நாள்களுக்கு குடித்து வந்தால் மாதவிடாய் ஒழுங்கற்ற மாதவிடாய்,  அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com