தேவையான பொருள்கள்:
பால் - அரை லிட்டர்
முந்திரி - 10
சர்க்கரை - 300 கிராம்
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிது
நெய் - 100 கிராம்
உப்பு - துளி
செய்முறை:
முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைக்க வேண்டும். சர்க்கரை, ஏலக்காயை பொடித்துகொள்ள வேண்டும். பாலைக் காய்ச்ச வேண்டும். அதில், அரைத்த முந்திரிப் பருப்பையும் பொடி செய்த சர்க்கரையுடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாகக் கிளற வேண்டும்.
ரவை, மைதா, உப்பு ஆகியவற்றுடன் டால்டா அல்லது நெய் விட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசைந்து சின்ன உருண்டைகளாக்கி சிறுசிறு பூரிகளாகச் செய்ய வேண்டும். ஒரு பூரியின் நடுவில் நெல்லிக்காய் அளவு முந்திரிக் கலவையை வைத்து அதன் மீது இன்னொரு பூரியை வைத்து அதன் ஓரங்களை முள் கரண்டியால் வெட்டி எடுத்துவிட்டு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி இறக்க வேண்டும். பாகில் சிறிது கேசரி பவுடர் சேர்த்து, பின்னர் பூரிகளைப் போட வேண்டும். சிறிது ஊறியதும் குலோப் ஜாமுன் போல எடுத்துச் சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


