நட்ஸ் ஆப்பம்

முதலில் வெந்தயத்தை முளை கட்டச் செய்து, காய வைத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து, துருவ வேண்டும்.
நட்ஸ் ஆப்பம்

தேவையான பொருள்கள் :

பச்சரிசி  3 கிண்ணம்
புழுங்கல் அரிசி  3 கிண்ணம்
உளுந்து  1 கிண்ணம்
சாதம்  3 கைப்பிடி அளவு
வெந்தயப் பொடி  3 தேக்கரண்டி
நெய்  தேவையான அளவு
பாலாடைக்கட்டி  1 துண்டு
தேங்காய்த் துருவல்  1 மூடி
பாதாம், பிஸ்தா, முந்திரி  சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை  200 கிராம்

செய்முறை : 

முதலில் வெந்தயத்தை முளை கட்டச் செய்து, காய வைத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து, துருவ வேண்டும். பின்னர்,  நெய்யில் தேங்காய்த் துருவலை நிறம் மாறாமல் வதக்கவும்.  பின்னர்,  பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாக ஊறியதும் வெந்தயப் பொடி, சாதம் ஆகியவற்றைச் சேர்த்து ஆப்ப மாவு பதத்துக்கு அரைக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு போட்டுக் கரைத்து 9 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவை சற்று கனமான தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் விட்டு மூடி, வேகவைத்து எடுக்க வேண்டும். பிறகு அதை நமக்கு விரும்பிய வடிவங்களில் நறுக்கி மேலே தேங்காய்த் துருவல், பாலாடைக்கட்டி துருவல், பாதாம், பிஸ்தா, முந்தரி துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். இதனுடன் தேங்காய்ப் பால் ஊற்றியும் சாப்பிடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com