தனியா பத்தியக் குழம்பு

முதலில் வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும் தனியா, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துகொள்ளவும்.
தனியா பத்தியக் குழம்பு

தேவையான பொருள்கள்:

தனியா 3 தேக்கரண்டி
கடலைப் பருப்பு 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு 2 மேசைக்கரண்டி
கடுகு, எள் தலா அரை தேக்கரண்டி
மிளகு, நெய் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
புளி நெல்லிக்காய் அளவு வற்றல்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு சிறிதளவு

செய்முறை: 

முதலில் வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும் தனியா, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துகொள்ளவும். பின்னர், புளியை கெட்டியாகக் கரைத்துகொள்ளவும்.  பின்னர், அடிகனமான பாத்திரத்தில் புளி கரைசலை ஊற்றி, கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், எள் சேர்க்கவும்.  பின்னர், அரைத்தப் பொடியைப் போடவும். நன்றாக வாசனை வந்தவுடன் ஒரு கொதிவிட்டு குழம்பு போல கெட்டியானதும் இறக்கி வைக்கவும். 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து  அதில் நெய் ஊற்றி, சுடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும். இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டிக் கொள்ளலாம். இந்தக் குழம்பு புகைப்படாமல் இருந்தால்,  மூன்று நாள்கள் வரை கெடாமல இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com