துள்ளுமாவு
By துள்ளுமாவு | Published On : 13th August 2023 12:00 AM | Last Updated : 13th August 2023 12:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
பச்சரிசி ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம் அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கலக்கவும். கைகளால் பிடித்தால் துள்ளி எழும்பும். அதனால்தான் இதன் பெயர் துள்ளுமாவு.