

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டால், அதில் இரண்டு பங்கு தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர், மறுபடியும் 5 நிமிடங்கள் வடித்த சாதத்தை அடுப்பில் இருந்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
பால் வகை இனிப்புகள் மீந்துவிட்டால் பாயசம் செய்யும்போது உதிர்த்து சேர்த்தால் சுவை கூடும்.
உப்புமா மீந்து போனால் அதை உருட்டி கடலைமாவு, சுக்குத் தூள், ஓமம், சிறிது உப்பு அனைத்தையும் கரைத்து, உருட்டிய உருண்டைகளை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து போண்டா செய்யலாம்.
சுண்டைக்காய் அதிகமாக கிடைக்கும் நேரங்களில், அவற்றை நன்றாக எண்ணெயில் வதக்கி உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப் பொடி தூவி எலுமிச்சைச் சாறு பிழிந்து பிறகு தாளித்து ஊறுகாய் செய்யலாம்.
பஜ்ஜி, போண்டாக்கள் மீந்து போனால் அவற்றை சிறுதுண்டுகளாக்கி வெங்காயம், பூண்டு, தக்காளி சாஸ் சேர்த்து, துண்டுகளையும் சேர்த்து வதக்கி புதுவகையான சாலட் செய்யலாம்.
நன்றாகக் காய்ந்துப் போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்தக் கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுங்கள். பஜ்ஜி போன்று சுவையாக இருக்கும்.
சட்னி வகைகள் மிகுந்துவிட்டால் அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால் சுவையான ராய்த்தா செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.