

தேவையான பொருள்கள்:
பச்சரிசி ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம் ஒன்றரை கிண்ணம்
நெய் 6 மேசைக் கரண்டி
செய்முறை:
பச்சரிசியை நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போடவும். பிறகு, வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதை பாத்திரத்தில் உள்ள மாவில் சேர்க்கவும். 4 தேக்கரண்டி நெய்யையும் சேர்க்கவும். மூன்றையும் நன்றாகக் கலந்து உருண்டையாக உருட்டி, நடுவில் குழிசெய்து நெய்விட்டு திரி போட்டு மாவிளக்காக ஏற்றவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.