சின்னச்சிறு வயதில்...!

பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே  பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிவை:
சின்னச்சிறு வயதில்...!
Updated on
1 min read

பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிவை:

பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக் கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.  

மூன்று வயதுக்கு மேலான குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளிடத்தில் எதிர்காலத்தில் இவர்கள் தான்  கணவன் என்றோ, மனைவி என்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

குழந்தைகள் விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துகொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

குழந்தையால் சரியாகப் பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்து விடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிய வேண்டும்.

தொலைக்காட்சிகள், இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை "பேரண்டல் கன்ட்ரோல்' மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.  குழந்தைகள் அடிக்கடி செல்லும் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுறுத்துவது நல்லது.

குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மன நிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.  நண்பர்கள், குடும்பங்களும் அடங்கும்.

குழந்தை யாரேனும் ஒருவரைப் பற்றி குற்றச்சாட்டை கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com