பீர்க்கங்காய் தோல் துவையல்

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு எடுத்துகொண்ட பொருள்கள்களை ஒன்று ஒன்றாகத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

பீர்க்கங்காய் தோலை பொடியாக நறுக்கியது- 1 கிண்ணம்
சிவப்பு மிளகாய்- 5
கடலைப்பருப்பு- அரை கிண்ணம்
தேங்காய் துருவல்- அரை கிண்ணம்
புளி - ஒரு சிறிய எலுமிச்சைப் பழ அளவு
உப்பு- தேவையான அளவு
தாளிக்க: கடுகு- அரை தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 2 இலைகள்

செய்முறை: 

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு எடுத்துகொண்ட பொருள்கள்களை ஒன்று ஒன்றாகத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். பீர்க்கங்காய் தோலை முறுகலாக வதக்கியெடுத்து, ஆறியவுடன் எல்லா பொருள்களையும் மிக்ஸியில் சேர்த்து புளிச்சாறுகளை கரைத்து வடிகட்டி சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும். இந்தத் துவையல் இட்லி, தோசை, சூடான சாதத்துக்கு நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com