

தேவையான பொருட்கள்:
மேல் மாவுக்கு:
பச்சரிசி மாவு - 2 கிண்ணம்
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வாழை இலை -10 முதல் 15 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு:
தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்,
வெல்லம் - கால் கிண்ணம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் தண்ணீரை கொதிக்கவிடவும். அதில் உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.
பூரணம் ரெடி. தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பி, நடுவில் பூரணம் வைத்து, இலையோடு சேர்த்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க வாழை இலை மணத்தோடு கொழுக்கட்டை தயார்!
இதேபோல் பூவரசு இலையிலும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ற பூரணம் வைத்து தயார் செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.