

தேவையான பொருட்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கிண்ணம்,
துவரம்பருப்பு - அரை கிண்ணம்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, பருப்பை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, நீரை வடித்து, ஒன்று சேர்த்து சிறிதளவு உப்பு, 2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மீதமுள்ள 2 மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, அரைத்த அரிசி பருப்புக் கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறினால், பாதி வெந்துவிடும்.
இப்போது கீழே இறக்கி, கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, இந்தக் கலவையை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இந்த கொழுக்கட்டைகளை மீதமுள்ள கால் கப் தேங்காய்த் துருவலில் போட்டு புரட்டி, பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.