முட்டையில் இவ்வளவு பயன்களா?

முட்டையின் பல அழகு குறிப்புகள் - சருமத்திற்கு புதிய பொலிவு!
முட்டையில் இவ்வளவு பயன்களா?

முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது கடலைமாவைச் சேர்த்து பசையாக்கி முகத்திலும் கழுத்திலும் நன்றாகத் தடவி சிறிது நேரம் ஊறியவுடன், குளிர்ந்த நீரில் அலம்பினால் வாடிய தோல் நாளடைவில் புது மெருகு பெறும். எண்ணெய் பசை இல்லாமல் உலர்ந்த முகம் உடையவர்கள் மஞ்சள் கருவை எடுத்து அத்துடன் பாலாடையும் பன்னீரையும் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் நன்றாகத் தடவி சிறிது நேரம் ஊறியவுடன் முகத்தை இளஞ்சூடான வெந்நீரில் அலம்பினால் தோல் பளபளப்பாக இருக்கும்.

மஞ்சள் கருவை முகத்திலும் கழுத்திலும் தடவி ஊறியவுடன் வெள்ளை கருவுடன் சிறிது கிளிசரின் பன்னீர் ஆகியன கலந்து தடவி சிறிது நேரம் ஊறிய பச்சை தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். நாளடைவில் சுருக்கம் மறைந்து விடும்.

பாதாம் பருப்புகளைத் தோல் உரித்து நன்றாக அரைத்து வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம்பழச் சாற்றை கலந்து முகத்தில் தடவி ஊறியவுடன் முகத்தை அலம்பினால் முகத்தில் உள்ள புள்ளிகள் மறைந்துவிடும்.

வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்று, கருமையாக அடர்த்தியாக வளரும்.

வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சம்பழத்தைக் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் பொடுகு மறையும். பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளைக் கருவை தேய்த்து குளிக்க வைத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. குழந்தையின் நிறமும் பொன்னிறமாக இருக்கும்.

வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் முகத்தில் பருக்கள் மறைந்து, நல்ல மாற்றம் ஏற்படும்.

வெள்ளைக் கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி... என முகம் முழுவதும் நன்றாகத் தடவி, நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.

சருமத்தில் கருப்புத் திட்டு போன்ற புள்ளிகள் தென்பட்டால் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர், கால் மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் அந்தப் பாதிப்பு நீங்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com