வீட்டுக் குறிப்புகள்...

முகம் பளபளப்புக்கு காகிதத் துடைப்பு!
வீட்டுக் குறிப்புகள்...

முகம் பார்க்கும் கண்ணாடியை காகிதத்தில் துடைத்தால் நன்றாக இருக்கும்.

உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேசையில் ஈக்கள் தொல்லை குறையும்.

சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து, கொதிக்க வைத்தால் நெய் கெடாமல் இருக்கும்.

எலுமிச்சைப் பழத் தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நாற்றம் உண்டாகாது.

வெள்ளி நகைகள் பளபளப்பாக இருக்க, கடலை மாவும் எலுமிச்சைப் பழச்சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் போதும்.

வெற்றிலைச் சாறுடன் கற்பூரம் சேர்த்து நெற்றிப் பொட்டில் பற்றிட்டால் தலைவலி நீங்கும்.

தும்பை இலைச் சாற்றை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பேன்கள் ஒழியும்.

கால் பாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் வேப்பெண்ணெய் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகிவிடும்.

அத்திப் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com