மஞ்சள் பூசணிக்காயின் மகத்துவம்

உடல் நலம் தரும் மஞ்சள் பூசணிக்காயின் பயன்கள்
மஞ்சள் பூசணிக்காயின் மகத்துவம்
Published on
Updated on
1 min read

மஞ்சள் பூசணிக்காயில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது தெரியுமா?

மஞ்சள் பூசணியில் கலோரிகள் மிகக் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளதால் எடையைக் குறைக்க உதவுகிறது. தினமும் பூசணி சாலட்டை இரண்டு முறை சாப்பிடுபவர்களுக்கும் ஒரு டம்ளர் பூசணி சாற்றை அரை தேக்கரண்டி தேனில் காலையில் வெறும் வயிற்றில் கலந்து குடிப்பவர்களுக்கும் கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறைகிறது.

பூசணிக்காயில் உள்ள உயிரியல் ரீதியாகச் செயல்படும் பொருள்கள் இயற்கையான கல்லீரல் சுத்தப்படுத்தியாகச் செயல்படுகிறது. பித்தப்பை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் 30 நாளைக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை பூசணி சாற்றை அரை கிளாஸ் குடித்தால் போதும்.

நல்ல தூக்கம் வர உந்துச் சக்தியாக இருக்கும். ஒரு டம்ளர் பூசணி சாறு, தேன் கலந்து குடித்தால் நரம்புகளை அமைதிப்படுத்தும். குளிர்ச்சியாகவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்க அரை டம்ளர் மஞ்சள் பூசணிக்காய் சாறுடன் வெள்ளை பூசணிக்காய் சாறு கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

நாற்பது வயதுக்கு பிறகு உணவில் தினசரி மஞ்சள் பூசணிக்காயை சேர்த்துகொண்டால், நல்ல பார்வைத் திறனை மேம்படுத்தும். ஆரோக்கியமான தோல், எலும்புகளை உருவாக்கும் பராமரிக்கவும் உதவுகிறது.

பூசணிக்காயில் உள்ள பெக்டின் பைட்டோஸ்டெரால்கள், பொட்டாசியம் கெட்ட கொழுப்பை குறைக்கவும் உயர் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

பூசணிக்காயின் தோலையும் விதைகளையும் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை தினமும் பெண்கள் தலையில் தேய்த்து வந்தால் தலையில் பேன்கள் வருவது தடுக்கப்படும். வறண்ட தலை முடி எண்ணெய் பசையுடன் காணப்படும். முடியும் நன்கு வளரும்.

பூசணிக்காயை உணவில் அளவோடு அடிக்கடி சேர்த்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பழுத்த பூசணிக்காயின் தலைப்பகுதியை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து ஒரு பாட்டிலை வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் இரண்டு தேக்கரண்டி அளவு பூசணிக்காயை எடுத்து அதனுடன் சர்பத்தை சேர்த்து பருகி வந்தால் பலவீனமான இதயம் வலிமை பெறும். ரத்த சோகை நீங்கும். உடலும் உள்ளமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

-, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com