தீயில் முகம் கருகி தப்பிப் பிழைத்த நடிகை...

திரைப்பட ஷூட்டிங்கில் தீ விபத்து: நடிகை அஞ்சலி தேவி உயிர் தப்பினார்
தீயில் முகம் கருகி தப்பிப் பிழைத்த நடிகை...

1949-ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பிரபல நடிகை தீப்பற்றி எரியும் காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நேரிட்ட சம்பவத்தில், தீயில் முகம் கருகினார் பிரபல நடிகை.

அந்த நடிகை படத்தின் இயக்குநர் கூறியபடி, காமிராவை நோக்கி நடந்துவந்தார். அவருக்குப் பின்னால் தீப்பற்றி எரிவதுபோன்று, ஒரு ஷாட் எடுக்கப்பட வேண்டும். நடிகை நடந்துவரத் தொடங்கிவிட்டார். படப்பிடிப்பு உதவியாளர்கள் செய்த தவறினால், சற்றும் எதிர்பாராமல் அங்கு தீப்பற்றியது.

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே பெருந்தீ பரவி, நடிகையின் சேலையில் பரவியது. அதை அணைக்க முடியாமல் அங்கிருந்தோர் தவிக்க, அழகான நடிகையின் முகம் கருகியது. மயங்கி விழுந்த நடிகையை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அதற்குள் முகம் முழுவதும் வெந்துவிட்டது. அந்த நடிகை அடையாளம் தெரியாமல் பததறி போய்விட்டார்.

'இனி அந்த நடிகை அவ்வளவுதான். படப்பிடிப்புக்கு வர முடியாது' என்றனர் சிலர். 'நான் பூஜிக்கும் சாயி பாபா என்னைக் கைவிட மாட்டார். நிச்சயம் காப்பாற்றுவார்' என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார் நடிகை.

இரண்டு மாத தீவிர சிகிச்சைக்குப் பின்னர், நடிகையின் கருகிய முகத்தில் தோல் கொஞ்சம், கொஞ்சமாக உறிந்து அழகிய முகம் வந்துவிட்டது. தீயில் கருகி தப்பிப் பிழைத்து முழுமையாகக் குணம் அடைந்த அந்த நடிகை யார் தெரியுமா? அஞ்சலி தேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com