கீரைப் பொங்கல்
கீரைப் பொங்கல்

கீரைப் பொங்கல்

பாசிப் பருப்பு, பச்சரிசி, நறுக்கிய கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
Published on

தேவையான பொருள்கள்:

பாசிப் பருப்பு 50 கிராம்

பச்சரிசி 100 கிராம்

ஏதாவது ஒரு கீரை 1 கட்டு

வெங்காயம் 2

பச்சை மிளகாய் 3

பூண்டு 5 பல்

சீரகம் அரை மேசைக்கரண்டி

மிளகு கால் மேசைக்கரண்டி

பால் 50 மில்லி

நெய் 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை:

பாசிப் பருப்பு, பச்சரிசி, நறுக்கிய கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குக்கரிலோ, பிரஷர்பானிலோ எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், மிளகு தாளித்து உப்பு போட்டு தேவையான தண்ணீர்விட்டு அரிசி, பாசிப் பருப்பு, கீரை பால் சேர்த்து வெந்ததும் நெய்விட்டு கிளறி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com