குழந்தை பிறந்த பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.
பச்சைப் பயிறு மாவுடன் தேன், பன்னீர் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் வைத்து கழுவினால், முகம் பளிச்சிடும்.
பெண்களின் வயிற்று சதை குறைய, சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என இரு வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால், அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.